கடன் சுமைக்கு மஹிந்த அரசாங்கம் காரணம் அல்ல

நாடு தற்போது கடனில் மூழ்கியுள்ளமைக்கு கடந்த மஹிந்த அரசாங்கம் காரணம் அல்ல என்றும், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவே காரணம் எனவும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தற்போது 167 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேசத்திடமிருந்து இலங்கை கடனான பெறவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக செயற்பட்ட காலத்தில் இலங்கையின் பொருளாதாரமும், ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியை சந்தித்ததென குறிப்பிட்ட பந்துல, அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று மக்களின் வரிச்சுமையினை அதிகரிப்பதற்காக புதிய பிரேரணை ஒன்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, பெற்றோலியத்தின் விலை குறைவடைந்தமையினால் நாட்டிற்கு 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபம் கிடைக்கப்பெற்றதென குறிப்பிட்ட பந்துல, அந்த பணம் எங்கே என்பதனையும் அரசு தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here