பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவன் சாதனை

பிரித்தானியாவில் வசிக்கும் இளம் வயது இந்திய வம்சாவளி மாணவன் 21 வயதில் மருத்துவப் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த அர்பன் தோஷி (21) என்ற மாணவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

பொறியாளரான அர்பனின் தந்தைக்கு அணுக்கரு இணைவுத் திட்டத்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்த நிலையில் கடந்த 2009ல் இந்தியாவிலிருந்து பிரான்ஸில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.

தனது 16வது வயதில் பிரான்ஸின் இன்டர்நேஷனல் பேச்சுலரேட் (International Baccalaureate) தேர்வில் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், கணிதவியல், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அர்பன் தேர்ச்சி பெற்றார்.

பின்னர், தனது 17வது வயதில் இளங்கலை தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பிறகு மருத்துவப் படிப்பினை கற்க விரும்பினார்.

இதையடுத்து பிரித்தானியாவில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் அர்பன் மருத்துவப் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கு திறமையாக படித்த அவர் தற்போது தனது 21 வயது, 334 நாட்களில் மருத்துவ பட்டப்படிப்பை பெற்றுள்ளார்.

இதன் மூலம் இளம் வயதில் மருத்துவரான சாதனையை அர்பன் படைத்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியா வரலாற்றில் மிகவும் இளம் வயது மாணவராகக் கருதப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here