“மெர்சல்” திரைப்படத்தின் இசை வெளியீட்டுக்கான திகதி அறிவிப்பு!

தளபதி விஜய்யின் “மெர்சல்” படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஒகஸ்ட் 20ஆம் திகதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே ‘மெர்சல்’ படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியானது . இந்நிலையில், பட தலைப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் பெருமளவில் நடைப்பெற்றது.

‘மெர்சல்’ என்ற வார்த்தை அசந்து போவது, வியப்பை தருவது, இன்ப அதிர்ச்சி தருவது என்பது அதனுடைய பொருளாகும்.

இந்தநிலை “மெர்சல்” இசை வெளியிடு எப்போது இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் “மெர்சல்” இசை வெளியிடு எதிர்வரும் ஒகஸ்ட் 20ஆம் திகதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜயுடன், காஜல் அகர்வால், மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here