வவுனியா மாவட்ட 29வது இளைஞர் விளையாட்டு விழா

வவுனியா மாட்டத்தின் 29வது விளையாட்டு விழா நிகழ்வுகள் நேற்று நடைபெற்றுள்ளன.

குறித்த நிகழ்வுகள் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளும் கௌரவ அதிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இவ் வருட விளையாட்டு நிகழ்வில் பரிசளிப்பு நிகழ்வு மற்றும் உதைபந்தாட்ட கண்காட்சி போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன.

இந்த போட்டிகளில் 786 இளைஞர் கழகம் எதிர் அல் இக்பால் இளைஞர் கழகங்கள் மோதிக்கொண்டதுடன், தடகள மற்றும் பெரு விளையாட்டு விழாக்களின் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here