மாவட்ட தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்கள்

மலையக மக்கள் முன்னணியின் மாவட்ட தலைவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 17 பேர் மாவட்ட தலைவர்களாக ஹட்டன் மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நியமனக்கடிதங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்திற்கு 16 மாவட்ட தலைவர்களையும், புஸ்ஸல்லாவ பகுதிக்கு மாவட்ட தலைவரொருவரையும் தெரிவு செய்யும் வகையில் 16 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்றது.

இந்த வாக்களிப்பின் பின் அதிக வாக்குகளை பெற்ற 16 பேருக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.அரவிந்தகுமார், மலைய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஆ.லோரன்ஸ், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here