35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் துவிச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் இருவர் படு காயம் அடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றதுடன், சமர்செட் பகுதியிலிருந்து லிந்துலை நகரத்தை நோக்கி சென்ற துவிச்சக்கரவண்டி லிந்துலை பாலத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் படு காயம் அடைந்த இரு சிறுவர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் துவிச்சக்கரவண்டியில் தடுப்புக் கட்டை செயழிழந்ததன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், லிந்துலை, சமர்செட் பகுதியை சேர்ந்த ரக்ஸான் (வயது 10) ஜனன திஸாநாயக்க (வயது 15) என்ற இரு சிறார்களே சம்பவத்தில் படு காயம் அடைந்துள்ளனர்.

மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here