சக ஊழியரின் இறுதிக் கிரியையில் காயமடைந்த மெய்ப்பாதுகாவலர்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நீதிபதியின் மற்றைய மெய்ப்பாதுகாவலர், உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலை நல்லூர் பின்வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றையவர் தோல்பட்டையில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் தனது சக ஊழியர் என்ற வகையில், உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்கு காயமடைந்த மெய்ப்பாதுகாவலர் விருப்பம் வெளியிட்டார்.

இதனையடுத்து, நீதிபதி இளஞ்செழியன் மற்றும் வைத்தியர்கள், பொலிஸார் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய நேற்று முன்தினம் சக ஊழியரின் இறுதிக் கிரியையில் காயத்திற்கு இலக்கான மெய்ப்பாதுகாவலர் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, சிலாபம் தலவத்தையில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் நல்லடக்க நிகழ்வுகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here