யாழ். துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் சரணடைந்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இன்று காலை 08.20 மணியளவில் குறித்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை மாலை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி பிரயோகத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here