கல்வி இராஜாங்க அமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மலையகத்தில்…

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமாகிய வே.இராதாகிருஸ்ணனின் 65ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசேட வழிபாடுகளும், நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் கொட்டகலை, ரிட்சோ விடுதியிலும் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர கதிரையும் வழங்கப்பட்டன.

அத்துடன், மலையக மக்கள் முன்னணியில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாவட்ட தலைவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஆ.லோரண்ஸ், மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் உறுப்பினருமாகிய ஆர்.ராஜாராம் உட்பட முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here