ரயில்வே சாரதிகளின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து பிரதியமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தங்களது சங்க உறுப்பினர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் சுமார் 150 ரயில் பயணங்கள் தடைப்படும் என அச்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட நேற்றையதினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here