யாழில் இடம்பெறும் வன்முறைகளுக்கு வடமாகாண சபையே பொறுப்பு.

யாழ்.நகரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இளைஞர்களின் வன்முறைச் செயற்பாடுகளிற்கு வட மாகாண சபையும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது.

இவ்வாறு வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா ஊடகங்களிற்கான அறிக்கையிற் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏறத்தாழ ஏழு இலட்சம் மக்கள் வாழும் யாழ் மாவட்டத்தில் ஒரு சில நபர்களின் வன்முறைச் செயற்பாட்டினை வைத்துக் கொண்டு யாழ்ப்பாண மக்கள் வன்முறையை நோக்கிச் செல்கிறார்களெனத் தெற்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அதே போல் புனர்வாழ்வு பெற்ற ஏறத்தாழ பன்னீராயிரம் முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகளில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரின் செயற்பாட்டை வைத்துக் கொண்டு முன்னாள் போராளிகளிற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அரச தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிவந்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அவ்வாறான வன்முறைச் செயற்பாடுகள் இளைஞர்களின் விரக்தி நிலையின் விளைவேயொழிய, அவர்களில் ஒரு சிலர் முன்னாள் போராளிகள் என்பதற்காக எல்லா முன்னாள் போராளிகளையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதோ, அவர்களைப் புண்படுத்தும் முகமாகக்கருத்துகளை வெளியிடுவதையோ அரசு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இல்லையேல், இது சும்மா இருப்பவர்களையும் தூண்டும் செயலாகவும் அமைந்து விடும். மூன்று சிரே~;ட பொலிஸ்மா அதிபர்கள் மீது பாரிய குற்றங்கள் சுமத்தப்பட்டு, ஒருவர் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்,

இன்னொருவர் விளக்கமறியலிலிருந்து பிணையில் நிற்கின்றார், மற்றையவர் விளக்கமறியலில் உள்ளார்.

இவர்களின் செயற்பாட்டிற்காக முழு பொலிஸ் திணைக்களத்திற்கே அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட முடியுமா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இன்று மூன்று வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றது.

இந்த நாற்பத்தைந்து மாத காலத்திற்குள் வடக்கில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய முதலீடுகளை வரவழைக்கக் கூடிய எந்தவித வேலைத்திட்டங்களையும் வட மாகாண சபை செய்யவில்லை.

மாறாக வரவிருந்த முதலீட்டுவாய்ப்புகளைக் கூடத் தடுத்த அல்லது அசமந்தப் போக்கால் கைநழுவ விட்ட செயற்பாடுகளே நடந்தேறியுள்ளது.

அந்த வகையில் முன்னாள் போரளிகள் உள்ளடங்கலாக வட மாகாண இளைஞர்களின் விரக்திக்கு வட மாகாண சபையும் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here