ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த யுவதியின் நிலை!

மாத்தறையில் ஹோட்டலில் காதலுடன் தங்கியிருந்த யுவதியை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை கொடுவேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் அறை ஒன்றை ஒதுக்கி காதல் ஜோடியொன்று தங்கியுள்ளது.

ஹோட்டல் அறையில் நீர் இல்லாத காரணத்தினால் வேறும் அறையிலிருந்து நீரைப் பெற்றுக் கொள்ள காதலன் அறையை விட்டு வெளியே சென்றதன் பின்னர், ஹோட்டலில் பணியாற்றிய ஐந்து பணியாளர்கள் அறையில் தனித்திருந்த யுவதியை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளனர்.

நீர் எடுத்துக் கொண்டு அறைக்கு திரும்பிய காதலன், தனது காதலியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சிக்கப்படுவதனை கண்டு ஆத்திரமுற்று ஹோட்டல் பணியாளர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்த கைகலப்பு தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஹோட்டல் பணியாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெலிஜ்ஜிவில பகுதியைச் சேர்ந்த 26 வயதான சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய நான்கு சந்தேக நபர்களும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

குருணாகல் மற்றும் கும்புறுபிட்டியைச் சேர்ந்த 20 வயதான காதலியும், 24 வயதான காதலனும் இவ்வாறு ஹோட்டலில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here