துறைமுகம் சம்பந்தமான உடன்படிக்கையில் மாற்றங்கள் செய்ய முடியாது

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையில் எதிர்காலத்தில் மாற்றங்களை செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் இன்றைய தினம் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒரு தரப்புடன் செய்துக்கொண்ட உடன்படிக்கை ஒன்றை நினைத்தவாறு மாற்றம் செய்ய எவருக்கும் முடியாது எனவும் அவர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக சீன நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் தேவையேற்படுமாயின் திருத்தங்களை செய்யலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here