யாழில் காரை மோதியது ரயில்! வைத்தியர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்

யாழ். இந்து மகளிர் கல்லூரிக்கு பின்புறத்தில் புகையிரதமும் காரும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள புகையிரதக் கடவையில் குறித்த விபத்து இன்று பிற்பகல் வேளையில் நடந்துள்ளது.

குறித்த விபத்தில் காரில் பயணித்தவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற குறித்த புகையிரதம் மோதுண்டமையால் காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்தவர் ஒரு வைத்தியர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here