வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்ற அமர்வு

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் கல்லூரியின் முதல்வர் பூலோகசிங்கம் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதிகளாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சு.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் ஜோயல் நிரோஷான், கோவில்குளம் சிவன் ஆலயத்தின் அறங்காவலர் சபையின் தலைவர் மற்றும் வவுனியா தெற்கு கல்வி வலய சமூகவியல் உதவிப் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here