இராணுவத்தினரின் அதிகாரத்தை குறைக்கும் சுற்றறிக்கை!

சிவில் மக்களை கைது செய்தல் அல்லது விசாரணை மேற்கொள்வதற்காக இராணுவத்திடம் காணப்படும் அதிகாரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இராணுவத்தினரின் அதிகாரத்தை குறைக்கும் யோசனைக்கு, தமிழ் மக்களை அடக்கி ஆள விரும்பும் சில தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

வடக்கில் ஏற்படும் வன்முறை நிலைமை தொடர்பில் ஆராய்ந்து பார்த்தல் மற்றும் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு இந்த புதிய சுற்றறிக்கை தடையாக இருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் தீவிரவாதம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை எனவும், விடுதலை புலிகள் முன்னர் போன்றே மீண்டும் வருவதற்கான முயற்சிகளை தடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தார்.

இதனை சுட்டிக்காட்டும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அவ்வாறான சூழலினுள் சிவில் மக்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு இராணுவத்திடம் உள்ள அதிகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பது தவறு என தெரிவித்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவசர சட்டம் அமுல்படுத்தப்படாமையினால் அனைவரும் சிவில் சட்டத்திற்கு உட்பட வேண்டும் என இந்த சுற்றறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சட்டம் பொலிஸாரினாலேயே செயற்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதாவது குற்றம் இடம்பெறும் சந்தர்ப்பங்களில், இராணுவத்தினரால் அது தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்க வேண்டும். கைது செய்யக்கூடாதென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்டில் பயிற்சி பெறுவதற்கு சட்டவிரோதமாக மரங்களை வெட்டும் நபர்களை கைது செய்யும் அதிகாரம் இராணுவத்திடம் காணப்பட்ட போதிலும், இந்த சுற்றறிக்கைக்கமைய இந்த அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொலிஸாரிடமே அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here