கிளிநொச்சியில் சிகிச்சை பலனின்றி 12 வயதுச் சிறுமி மரணம்.

சிகிச்சை பலனின்றி  12 வயதுச் சிறுமி மரணம்  : கிளிநொச்சியில் சம்பவம்

இன்று நண்பகல் 01 மணியளவில் நெஞ்சு நோவு, இருமலுடன் இரத்தம் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று  இரவு 8 மணியளவில் இறந்துள்ளார்

ஸ்கந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இச் சிறுமி
கடந்த  ஐந்து நாட்களாக  காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்ததாக
உறவினர்கள் தெரிவிகின்ற நிலையிலும்  .   இன்றையதினமே  குறித்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை நடைபெற்ற பொழுதும் சிகிச்சை  பலனின்றி இன்று  இரவு 8 மணியளவில் இறந்துள்ளார்

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இச்சிறுமிக்கு பாரதூரமான நோய் எதுவும் இருப்பதாகத் தெரியவரவில்லை என வைத்தியசாலை தரப்பு தெரிவிக்கின்ற நிலையிலும் . இவரது இறப்பிற்கான காரணம் பிரேத
பரிசோதனையின் பின்னரே தெரியவரலாம்.என தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, காய்ச்சல் முதலான அறிகுறி தென்படும் எவரும் அருகில் உள்ள அரச
மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைபெறுமாறு கிளிநொச்சி  சுகாதாரப் பிரிவினர் வேண்டிக் கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here