பல இரகசியங்களை அம்பலப்படுத்த இலங்கை வரும் எமில்காந்தன்!

விடுதலை புலிகள் அமைப்பின் நிதி பிரிவிற்கு பொறுப்பாக இருந்த எமில்காந்தன் இலங்கை வரவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்போது இதுவரை வெளியாகாத சர்ச்சைக்குரிய பல உண்மை தகவல்களை வெளியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மீளவும் கட்டியெழுப்புவதற்காக உருவாக்கப்பட்ட ராடா அமைப்பில் 12 கோடி ரூபாய் அரசாங்க நிதி மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உட்பட ஏனைய சிலருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையில் சாட்சியாளராக எமில்காந்தன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

விடுதலை புலிகள் அமைப்பு மற்றும் தெற்கு அரசியல்வாதிகளுக்கு இடையிலான தொடர்பு, இறுதிக்கட்ட போரின் இரகசியங்கள் உட்பட பல தகவல்களை எமில்காந்தன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here