யாழ். பல்கலைக்கழகத்தில் 13ஆவது பன்னாட்டு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 13ஆவது பன்னாட்டு மாநாடு இன்று (05.08.2017) நடைபெற்றுள்ளதுடன், நாளைய தினமும் நடைபெறவுள்ளது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ். பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் குறித்த மாநாடு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 200 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.   

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here