வவுனியா பொது வைத்தியசாலை ஆலயத்தின் உண்டியல் உடைத்து திருட்டு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றிலுள்ள உண்டியல் நேற்றைய தினம் இனந்தெரியாதவர்களால் உடைத்து திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் உள்ள மின்விளக்கினை நேற்று மாலை அங்கு கடமையிலிருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒளிரச் செய்து சென்றுள்ளார்.

பின்னர் இன்று அதிகாலை மின் விளக்கினை அணைக்க சென்ற சமயத்தில் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்து உடனே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here