கிளிநொச்சியில் வாள்வெட்டு மூவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் வாள்வெட்டு மூவர் வைத்தியசாலையில்

இன்று பிற்பகல் இரண்டு முப்பது மணியளவில் கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இனக்கான நிலையில் யாழ் பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த மூவர்  கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர் இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக் காக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சற்று முன் அனுப்பப்பட்டுள்ளார்
குறித்த சம்பவத்தில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கானவர்கள்  யாழ் பருத்தித்துறை பிரதேசத்தை 35,25,19 ஆகிய வயதை உடைய ஆண்களே என தெரியவருகின்றது இதில் 25 வயதான இளைஞனே
மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்
இவ் வாள்வெட்டு சம்பவம் ஆனது குடும்பத் தகராற்றினால் இடம்பெற்றுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன அத்துடன்    மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் குறித்த பிரதேசத்தின் நிலைமை தற்பொழுது சுமூகமாகவும் இருபதாக  அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here