ஆபத்தான நிலையில் நிலத்தடி நீர் மட்டம்! பாதுகாக்குமாறு கோரிக்கை

எதிர்பார்த்த அளவு நீர் கிடைக்காமையினால் நிலத்தடி நீர் மட்டம் பாரிய அளவு குறைந்துள்ளதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வறட்சியினால் ஏற்பட்டுள்ள இந்த சவாலினை வெற்றி கொள்வதற்காக அனைவரும் தனித்தனியாக தங்கள் பொறுப்பினை நிறைவேற்ற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தம்மால் நீக்கப்படும் பொலித்தீன் அல்லது பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை வீதியில் வீசுவதற்கு பலர் முயற்சிக்கின்றனர். மேலும் பலர் கழிப்பறை குப்பைகளை நீர்தேக்கங்களில் வீசுகின்றனர்.

இவ்வாறான முறையற்ற செயற்பாடு காரணமாக மக்களுக்கு தேவையான குடிநீர் இழக்கப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே நீர்த்தேக்கங்களில் குப்பை கொட்டுவதனை தவிர்க்குமாறும் நீரைப் பாதுகாக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here