காருக்குள் மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழப்பு!

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில்,  ஐந்தரை வயதுச் சிறுவன் காருக்குள் மூச்சுத்திணறி, உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒலுவில் 6ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது லாபீர் முஹம்மது இன்ஸாப் என்ற சிறுவனே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,

குறித்த சிறுவன், சம்பவதினம் மாலை 5 மணியளவில் தனது வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரைத் திறந்து உள்ளே சென்று, காரின் கதவுகளை பூட்டிக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுவனைக் காணவில்லையென சிறுவனின் பெற்றோர் தேடி வந்த நிலையில், குறித்த காரின் உரிமையாளர் காரைத் திறந்து பார்த்த போது, சிறுவன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சிறுவனால் காரின் கதவுகளைத் திறக்க முடியாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, காருக்குள்ளேயே, சிறுவன் உயிரிழந்துள்ளாரென, பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனின் சடலம் ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here