படப்பிடிப்பு தளத்தில் நடிகா் விஷால் காயம்!

விஷால் நடித்து வரும் துப்பறிவாளன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இடம்பெற்றுவருகின்ற நிலையில், இன்று இடம்பெறும் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பின் பொழுது  விஷால் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

மிஷ்கின் இயக்கத்தில்  விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்கியராஜ், ஆண்ட்ரியா, ஆகியோர்“ நடிக்கும் திரைப்படம் துப்பறிவாளன். குறித்த படத்தின் படப்பிடிப்புக்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்றய சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பிலேயே  விஷால் காயமடைந்துள்ளார்.

மேலும் குறித்த  படத்தின் கதையானது தமிழில் வெளிவந்த “துப்பறியும் சாம்பு“ என்னும் நாவலில் இடம்பெற்ற கதையின் சாரமாக இருக்கும் என்று தெரியவருகின்ற நிலையில், குறித்த படம் எதிரவரும் 11ஆம்(ஓகஸ்ட் 11) திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்களே இடம்பெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here