முட்­டிக்­கொண்ட மாவை – சுரேஸ்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­கும் இடையே நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற சந்­திப்­பில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ரா­சா­வும், ஈ.பி.ஆர்.எல். தலை­வர் சுரேஸ் பிரே­ம­ச்சந்­தி­ர­னும் கடும் வாய்த்­தர்க்­கத்­தில் ஈடுபட்டுள்­ள­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில், பங்­கா­ளிக் கட்­சி­க­ளான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி, புளொட், ரெலோ, ஈபி­ஆர்­எல்­எவ் ஆகி­ய­வற்­றின் தலை­வர்­கள் மற்­றும் முத­ல­மைச்­சர் விக்னேஸ்­வ­ர­னுக்கும் இடை­யே­யான சந்­திப்பு முத­ல­மைச்­ச­ரின் இல்­லத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது.

இந்­தச் சந்­திப்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி மீது, ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சி­யின் தலை­வர் சுரேஸ் பிரே­ம­ச்சந்­தி­ரன் தொடர்ச்­சி­யாக விமர்­ச­னங்­களை முன்­வைத்­துக் கொண்­டி­ருந்­தார்.

ஒரு கட்­டத்­தில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா, “நானும் கதைக்க வெளிக்கிட்­டால் உதை­வி­டக் கூடக் கதைப்­பேன். அதற்­கான இட­மும் இதில்லை.

நீங்­கள் (சுரேஸ்) வரு­வீர்­கள் என்று தெரிந்­தி­ருந்­தால் நான் இந்­தக் கூட்­டத்­துக்கு வந்­தி­ருக்­க­மாட்­டேன்” என்று காட்டமா­கத் தெரி­வித்­துள்­ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here