வறட்சியால் வடக்கில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

கடும் வறட்சியினால் 19 மாவட்டங்களில் 12 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் வடக்கு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் மட்டும் ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 284 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 994 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 72 ஆயிரத்து 989 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 63 ஆயிரத்து 527 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here