அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கிளிநொச்சியில்  ஆர்ப்பாட்டம்கிளிநொச்சியில்  அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்சன் ஆகியோர் சிறையில் கொல்லப்பட்டு ஜந்தாண்டு நினைவை முன்னிட்டும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கந்தசுவாமி ஆலயம் முன்றலில்  ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இன்று செவ்வாய் கிழமை  அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்  காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு நீதி, இராணுவ முகாம்களை அகற்றுதல், காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு போன்ற விடயங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிறைசாலைகளில் படுகொலை செய்யப்பட்டவா்களுக்கு  பதில் என்ன? அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லையா? காணாமல்  ஆக்கப்பட்டவா்களுக்க பதில் என்ன? மக்களின் நிலங்களின் இருந்து இராணுவமே வெளியேறு, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன் வை, நாட்டில் நடப்பது நல்லாட்சியா? பேயாட்சியா? போன்ற கோசங்கள் எழுப்பபட்டன. அத்தோடு  ஒரு குற்றம் இரு தண்டனையா? கண்ணதாசன்  உள்ளிட்ட ஏனைய அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற வாசகங்களும் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனா்   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here