இலங்கை கடற்படையினரை நள்ளிரவில் கடத்திய தமிழக மீனவர்கள்?

இலங்கைக் கடற்படையினரில் ஒருவர் தமிழக மீனவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டைப்பட்டினம் மீனவர்களால் இலங்கை கடற்படை வீரர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்தத் தகவல்களை இலங்கைக் கடற்படையினர் முற்றாக மறுத்துள்ளனர். அவ்வாறான சம்பவம் ஏதும் நடக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களையும், நாகபட்டினத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், 11 விசைப்படகுகளுடன் 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கைக் கடற்படையினரில் ஒருவர் தமிழக மீனவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று தமிழக மீனவர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

அதனாலேயே பெரும் எண்ணிக்கையான தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here