கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் கதிர்காமத்தில் உயிரிழப்பு

கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர், கதிர்காமத்தில் பேருந்து சில்லில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கதிர்காம கந்தனை தரிசிப்பதற்காக அங்கு சென்ற கிளிநொச்சி வாசிகள் சிலர், அருகிலுள்ள மைதானத்தில் உறங்கியுள்ளனர். இந்நிலையில், அவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து சாரதி, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பேரூந்தை பின்னோக்கி நகர்த்தியுள்ள போது, இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்து கதிர்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மற்றுமொருவர் அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, பேரூந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here