கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளியில் 3,937 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 3,937 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளதுடன், 233 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழான மீள்குடியேற்றம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பச்சிலைப்பள்ளி பிரிவில் உள்ள 18 கிராம அலுவலர் பிரிவுகளில் 3,937 குடும்பங்களைச் சேர்ந்த 12,706 பேர் மீள்குடியேறி இருக்கின்றனர். இருப்பினும், கண்ணிவெடி அகற்றப்படாமையினால் பல குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாதுள்ளன.

மீள்குடியேற்றத்திற்காக 233 வரையிலான குடும்பங்கள் விண்ணப்பித்திருக்கின்றன. மேலும் பல குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்கவில்லை.

ஏற்கனவே விடுவிக்கப்பட்ட முகமாலை, வேம்பொடுகேணிப்பகுதிகளில் குறைந்தளவான மீள்குடியேற்றத்திற்கே பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் நிலங்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து 78 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here