சட்டமா அதிபரின் ஆலோசனையை அடுத்தே ரவி குறித்து முடிவு

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சட்டமா அதிபரின் ஆலோசனையை அடுத்தே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவங்ச ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இது குறித்து சட்டப்பிரச்சினையொன்று முன்வைக்கப்பட்டது. எனவே, அது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்ற பின்னர் வியாழக்கிழமை மீண்டும் ஆராயப்படும்.

எனவே சட்டமா அதிபரின் ஆலோசனையின் பின்னரே இது குறித்த முடிவெடுக்கப்படும்” என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here