சட்டவிரோத மீன்பிடி: 4 உள்நாட்டு மீனவர்கள் கைது

கொக்கிளாய் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடல் பகுதியில் வெடிபொருட்களை (டைனமைட்) பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு டிங்கி படகு, சட்டவிரோத 02 வலைகள் மற்றும் பிடிக்கபட்டுள்ள 50 கிலோகிராம் மீன்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here