டெங்கு நோயளர்களுக்கு ஆலோசனை

டெங்குக் காய்ச்சல் தொற்றியுள்ளவர்களின் தொகை  அதிகரித்து வரும்  நிலையில், இந்த நோய்க்கு சிறந்த நோய் நிவாரணி எனக் கருதப்படும், பச்சை நிறத்திலான பழ வகைகளின் சாறுகளைப்  பருகுமாறு, வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பச்சை நிற அப்பில் மற்றும் திராட்சை   (முந்திரிகை)ப் பழங்களின் சாறுகளில், டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை அதிகம் இருப்பதால், இதனை டெங்கு நோயாளர்கள் எவ்வித  அச்சமுமின்றி பாவிக்க முடியும்  என்றும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உணவகங்களில் அல்லது சுப்பர் மார்க்கட்டுக்களில் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பழச்சாறுகளைவிட, இயற்கையிலேயே தயாரிக்கப்படும் பழச்சாறுகளிலேயே அதிகப்படியான விட்டமின்களும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இயற்கைச் சாறுகளையே விசேடமாகத் தயாரித்துப் பருகுமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பச்சை நிற அப்பில், பச்சை நிறத் திராட்சை ஆகிய பழங்களுக்கு மேலதிகமாக, பச்சை நிற வேறு வகையிலான பழச்சாறுகளையும் டெங்குக் காய்ச்சல் தொற்றியுள்ளவர்கள் தயாரித்துப் பருகலாம் என்றும், இதனால் எவ்விதப் பாதிப்புக்களும் உண்டாகமாட்டாது என்றும், வைத்தியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here