நியாயப்பத்திரத்திற்கு தீ வைப்பு! சபையில் அசாதாரண நிலை

வடமத்திய மாகாண சபையில் தற்போது அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டவருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் நியாயப்பத்திரத்திற்கு தீ வைத்துள்ளனர்.

இதனால் சபையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வடமத்திய மாகாண சபையில் கடந்த மாதம் 18ஆம் திகதியும் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் ஏற்படிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 11 பேர் இணைந்து வடமத்திய மாகாண சபையின் அவைத் தலைவர் ரி.எம்.ஆர். சிறிபாலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருந்தனர்.

குறித்த பிரேரணை கடந்த மாதம் 18ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சபை நடவடிக்கைகளை எதிர்வரும் 8ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்து விட்டு செங்கோலுடன் அவைத் தலைவர் ரி.எம்.ஆர். சிறிபால வெளியே சென்றார்.

இதன் காரணமாக அன்றைய தினமும் மாகாண சபையில் கடுமையான அமளி துமளி நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், வட மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

பின்னர், பிரதி அவைத் தலைவர் டி.எம். அமரதுங்க அவைக்கு தலைமை தாங்கினார்.

தொடர்ந்தும் எதிக்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தமையால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கூச்சல், குழப்பம் விளைவித்தனர்.

ஒரு சிலர் கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவை பிற்பகல் 2.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய போது, நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதுடன், புதிய அவைத் தலைவரும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here