மட்டக்களப்பில் மணல் அகழ்வு மற்றும் மரம் வெட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணல் அகழ்வைக் கண்டித்தும், வனப் பகுதிகளில் மரம் வெட்டுவதை தடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பு – வேப்பவெட்டுவான் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று இலுப்பையடிச்சேனை, வேப்பவெட்டுவான் மற்றும் பாலர்சேனை கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்றன.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது பிரதேசத்தில் 45 பேருக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை 9 மணல் வியாபாரிகள் நடத்துகின்றனர்.

நாங்கள் வறுமையில் வாடும் போது வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் எங்களது வளத்தை வைத்துக் கோடிஷ்வரர்களாக வாழுகின்றனர்.

மலசல கூடம் கட்டுவதற்கும் எமது மக்கள் அரசாங்கத்தை நாட வேண்டியுள்ளது. கடந்த முறை மணல் அகழ்வதை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்து பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரிடம் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தோம்.

எனினும் மணல் அகழ்வை நிறுத்துவது தொடர்பாக நான் மாத்திரம் முடிவெடுக்க முடியாது. மாவட்ட செயலாளரிடமும் மனு கையளிக்குமாறு கூறினார்.

அதனடிப்படையில் மாவட்ட செயலாளரிடமும் மனுவைக் கையளித்தோம். இது தொடர்பாக சரியான தீர்வு கிடைக்குமென மாவட்ட செயலாளர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் எங்களிடம் உறுதியளித்தார்.

ஆனால் தற்போது மணல் ஏற்றுவதற்கான அனுமதி புவிசரிதவியல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here