இலங்கையுடனான உறவில் கனடா கொண்டுள்ள அதீத ஈடுபாடு!

இலங்கையுடனனான உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக, கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற ஆசியான் மாநாட்டிற்கு சமாந்தரமாக, இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, குறிப்பாக இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து கனேடிய அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here