உடுவே தம்மாலோக தேரர் வெளிநாடு செல்ல அனுமதி

கொழும்பு உலன் மெதினியாராமயவின் விஹாராதிபதி உடுவே தம்மாலோக தேரர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை விஹாரையில் வளர்த்து வந்தார் என தம்மாலோக்க தேரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பௌத்த மதப் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு தம்மாலோக்க தேரர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றிடம் கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கைக்கு அரச தரப்பு சட்டத்தரணிகள் எதிர்ப்பு எதனையும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து தம்மாலோக்க தேரர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ம் திகதி வரையில் வெளிநாட்டு பயணம் செய்ய கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரட்ன நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

இதேவேளை, நீதிமன்றில் விசேட கருத்து ஒன்றை வெளியிட அனுமதிக்குமாறு தம்மாலோக தேரர் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வழக்கு விசாரணையின் போது மனுதாரர்கள் அல்லது பிரதிவாதிகளின் விசாரணை நிறைவில் அல்லது ஆரம்பத்திலேயே இவ்வாறு விசேட கருத்துக்களை வெளியிட அனுமதிக்க முடியும் எனவும் இடைநடுவில் அனுமதிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here