‘பிக்பொஸ்’ புகழ் ஓவியாவின் அடுத்த படம்

பெருமளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ள ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சி ஊடாக கோடிக்கணக்கான இரசிகர்களின் மனங்களை வென்றுள்ள ஓவியா புதுமுக இயக்குனர் செல்லா இயக்கத்தில் நடித்துவருகின்றார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ திரைப்படமே ஓவியாவில் அடுத்த படமாக வெளிவரவுள்ளது. இந்த திரைப்படத்தில் ஓவியாவுடன் மற்றுமொரு கதாநாயகியாக ரெஜினாவும் நடித்துள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதவிர ‘போகி’ என்னும் திரைப்படத்திலும் ஓவியா தற்போது நடித்து வருகிறார். ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னரே இவ்விரு படங்களிலும் ஓவியா ஒப்பந்தமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிக்பொஸ் நிகழ்ச்சி ஊடாக ஓவியாவுக்கு உச்சக்கட்ட புகழ் கிடைத்துள்ள நிலையில் இனிவரும் நாட்களில் அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இரசிகர்களின் ஆதரவு அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here