மயானங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் வடக்கு ஆளுநர் கூட்டம்

மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் காணப்படும் மயானங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று பிற்பகல் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் றஞ்சன், வலி.கிழக்குப் பிரதேச சபையின் செயலாளர், அதிகாரிகள், கிராம சேவகர்கள், மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் மயானங்கள் சம்பந்தமான விடயம் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இருப்பதன் காரணமாக வடமாகாண முதலமைச்சருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட தரப்பினரை வேண்டிக்கொண்டார்.

இதேவேளை, யாழ். குடாநாட்டில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்து காணப்படும் மயானங்களை அகற்ற வலியுறுத்திப் புத்தூர் கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமான மாபெரும் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 29 ஆவது நாளாகவும் தீர்வின்றி இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here