மின்னல் தாக்கி சிறுவன் பலி

கெப்பிற்றிக்கொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் அற்றாவ பகுதியில், மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி சிறுவனொருவன் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெப்பிற்றிக்கொல்லாவ, அற்றாவ புதிய வளவைச் சேர்ந்த சபீர் றுஸைத் என்ற 14 வயதுடைய சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் தனது வீட்டிலுள்ள மலசலகூடத்துக்குச் சென்ற போது, மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கெப்பிற்றிக்கொல்லாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here