வவுனியா வாகன விபத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி.

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தின்போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம் பகுதியிலிருந்து நெளுக்குளம் பகுதியை நோக்கி பயணித்த சிறிய ரக வாகனம் ஒன்று இராசேந்திரகுளம் பகுதியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின்போது வவுனியா பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான முஹம்மட் என்பவரே பலியாகியுள்ளார்.

குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதியதால் மின் கம்பம் முறிந்து வாகனத்தின் மீது விழுந்துள்ளது. இதன் காரணமாக மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here