இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள்!

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மியன்மாரைச் சேர்ந்த ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் 31 பேரையும் கொழும்பிலுள்ள ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் கையளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளை தடுப்பு முகாமுக்கு வெளியே கல்கிஸ்ஸை பகுதிக்கு மாற்றி பராமரிக்க ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (UNHCR) முன்வந்துள்ள நிலையில், நீதிமன்றிடம் இதற்காக அனுமதி கோரப்பட்டிருந்தது.

குறித்த கோரிக்கைக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மியன்மாரைச் சேர்ந்த 31 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, மீரிஹானா தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், 31 பேரையும் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (UNHCR) மூலம் பராமரிக்க அனுமதி கோரி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here