விக்னேஷ் சிவனுடன் இணைகிறார் நடிகர் சிவா.

சூர்யா நடிப்பில் உருவாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

சூர்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை தற்போதே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்து தருவதாக சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டிருந்த நிலையில் விக்னேஷ் சிவன் படத்தின் மூலம் அது நிறைவேறவுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here