அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை!

 

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் ஆகியன முடிவடைந்த பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது.

இதன்போது, ஊவா மாகாண சபையின் பொதுமனுக்கள் குழு தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் சமிந்த விஜேசிறி எம்.பி. கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அவ்வேளையில் அமைச்சர் சபையில் பிரசன்னமாகியிருக்காததால், ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க பதில்களை வழங்கினார்.

இதையடுத்து கருத்து வெளியிட்ட ஆளுங்கட்சி எம்.பியான சமிந்த விஜேசிறி, ஊவா மாகாண சபையின் பிரச்சினைகள் சம்பந்தமாக தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகின்றேன்.

ஆனால், பதில்களை வழங்குவதற்கு அமைச்சர் வருவதில்லை. கேள்வி பதில் நேரத்தின் போது அமைச்சர்கள் சபையில் இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அறிவுறுத்தியும் அது உரிய வகையில் நடக்கவில்லை.

எனவே, அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்குத் தயாராகி வருகின்றேன்.

இதற்குப் பின்வரிசை எம்.பிக்களும் ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகின்றேன் என தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here