காணி உரிமை தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடமாடும் சேவை.

அரச காணிகளின் உரிமை தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பதற்கான ஜனாதிபதி நடமாடும் சேவை பூநகரி மற்றும் கரைச்சி.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலமெஹெவர எனப்படும் நடமாடும் சேவை மன்னார் வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஏப்பிரல் மே மாதங்களில் நடத்தப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட இருந்த நடமாடும் சேவை தென் பகுதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தது.

இவ் நடமாடும் சேவையானது இம் மாதம் 12ம் 13ம் திகதிகளில் அதாவது சனிக்கிழமை பூநகரியிலும் ஞாயிற்றுக்கிழமை கரைச்சி பிரதேச செயலகத்திலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ் நடமாடும் சேவையில் கொழும்பு காணி ஆணையாளர் திணைக்களத்தின் அதிகாரிகளும் சமூகமளிப்பதால் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள காணி உரிமை தொடர்பான பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக உள்ளது.

எனவே சம்மந்தப்பட்ட பொது மக்கள் இவ் நடமாடும் சேவைக்கு சமூகமளிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here