கௌரவத்தை தக்க வைக்குமா இலங்கை?

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இலங்கையுடன் 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இந்திய புதிய சரித்திர சாதனைக்கு தயாராகிவரும் நிலையில், இது இலங்கைக்கு கௌரவ பிரச்சினையாக அமையவுள்ளது.

தொடரின் முதலிரு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இலங்கை கடந்த போட்டிகளில் சொந்த நாட்டில் மண்ணை கவ்வி தலைகுனிய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டது.

இந்நிலையில், மூன்றாவதும் இறுதியுமான போட்டி, கண்டி- பல்லேகலை மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

நாளைய போட்டியிலும் வெற்றிபெற்று ஹட்ரிக் சாதனைக்கு இந்தியா முயலும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் இந்த முயற்சியை இலங்கை அணி முறியடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை இரசிகர்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறாக நாளைய இறுதி போட்டி மிகவும் எதிர்பார்ப்புமிக்க போட்டியாக அமையவுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவுஸ்ரேலிய அணி, இலங்கையை வைட் வொஷ் செய்து தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here