முழங்காவில் விபத்து சந்தேகநபர் தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்கமறியலில்

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் கடந்த யூன் மாதம் ஆலயத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த சிறுவனின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தே நபரை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

கடந்த யூன் மாதம் 17 ஆம் திகதி முழங்காவில் நாகபடுவான் பகுதியில் ஆலயத்திற்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை மோதிவிட்டு தப்பிச்சென்ற கார் சாரதியையும் கைது செய்ய வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததுடன், பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை உரியமுறையில் முன்னெடுக்கவில்லை எனவும் இதற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனவும் கோரி கடந்த யூன் மாதம் 22 ஆம் திகதி இந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அன்றைய தினம் இரவே காரையும், சாரதியையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரான சாரதியை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

மேலும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாரதியை நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here