யாழில் உரையாற்றும் போது கவலைப்பட்டார் மங்கள

இலங்கையனாக இருந்து கொண்டு தமிழில் உரையாற்றுவதற்கு என்னால் முடியவில்லை. இதை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

யாழில் சுங்க திணைக்களத்தின் உப அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இங்கு சிங்களத்தில் உரையாற்றுவதற்கு வெட்கப்படுகின்றேன், தமிழில் உரையாற்றுவதற்கு என்னால் முடியவில்லையே என கவலை வெளியிட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நன்றாக தமிழ் தெரிந்தவர். அவரால் தமிழில் உரையாற்ற முடியும். இவ்வாறான ஒரு முதலமைச்சர் வடக்கிற்கு கிடைத்ததையிட்டு மிகவும் சந்தோசப்படுகின்றேன்.

1980ஆம் ஆண்டுகளில் இருந்தே இவர் நல்லிணக்கத்திற்காக போராடி வருபவர் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் வெள்ளைவான் கடத்தல் இல்லை, ஊடக சுதந்திரம் தாராளமாக காணப்படுகின்றது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், யார் பிழை செய்தாலும் அவர்கள் குறித்து விசாரணைகள் நடத்தி பாரபட்சம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here