உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

பிளவு மற்றும் சந்தேகமின்றி நம்பிக்கையுடன் சகலரும் சமூகத்தில் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதன் மூலமே நாட்டின் பொருளாதாரம் மற்றும் இனப்பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கியமின்மையை இல்லாமல் செய்து, புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையுடன் செயற்படும் சமூகத்தை நாட்டுக்குள் உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கிரம விமலஜோதி தேரருக்கு தென் இலங்கையின் பிரதான சங்க நாயக்கர் பதவியை வழங்குவதற்காக மாத்தறையில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

சில ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பிக்குகள் சம்பந்தப்பட்டு வருவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, உன்னதமான பிக்கு சமூகத்தின் கௌரவத்தையும் அங்கீகாரத்தை பாதுகாக்கும் வகையில் இளம் பிக்குமார் செயற்பட வேண்டியது முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here