காணியில் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டதற்கு எதிராக மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி கோவில்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியில் சிலர் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், கோவில்குளம் பகுதியில் உள்ள தனியார் காணிக்குள் தமக்கும் காணிகள் உள்ளதாக கூறி சிலர் வேலிகளை அகற்ற முற்பட்டபோது அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தவேளையில் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் தமது வேலிகளின் கட்டைகள் அகற்ற முற்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

அத்துடன், இந்த பகுதியில் சிலர் பரம்பரையாக வாழ்ந்த பகுதியெனவும் சிலருக்கு 1973 ஆம் ஆண்டு மரமுந்திரிகை செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட காணியெனவும் அதற்கான உறுதிகள் உள்ளன.

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு எழுதப்பட்ட காணி உறுதிப்பத்திரங்களுடன் தமது காணிகளுக்குள் அத்துமீறி நுழைந்த சிலர் வேலிகளின் கட்டைகளை அவிழ்த்து அத்துமீறல்களை மேற்கொண்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே காணி பிரச்சினை தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் விசேட கூட்டம் நடத்தப்பட்டு தமது காணிகள் என உறுதிப்படுத்தப்பட்ட காணியிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் சிலர் தம்மீது அழுத்தங்களை பிரயோகிக்க முனைவதாகவும் குற்றஞ்சாட்டும் காணி உரிமையாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிடவுள்ளது.

தமிழர் ஒருவர் தான் காணியை வாங்கியுள்ளதாக தெரிவித்துவந்த நிலையில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் சிலர் வந்து தமது காணியின் வேலிகளை அகற்றமுனைவதாகவும் இது தமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக காணி உரிமையாளர்கள் இங்கு கூறியுள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here